ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? | ரஜினி செய்த மாற்றம் |
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'திருச்சிற்றம்பலம்' படத்தை இயக்குனர் ஜவஹர் மித்ரன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. நித்யா மேனன் - ஷோபனா எனும் கதாபாத்திரத்திலும், ரஞ்ஜனி கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா - அனுஷா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் பாரதிராஜா சீனியர் திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்திலும், இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக பிரகாஷ் ராஜூம் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் திருச்சிற்றம்பலம் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு ஒரு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .