ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
திருப்பதி : திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சென்று வழிபாடு நடத்தி உள்ளனர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி. அங்கு கோயில் வளாகத்தில் அவர்கள் போட்டோஷூட் நடத்திய விஷயம் சர்ச்சையாகி உள்ளது.
6 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாய் சுற்றி வந்த நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி நேற்று திருமணம் செய்து கொ்டனர். மகாபலிபுரத்தில் ஒரு ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
முன்னதாக தங்களது திருமணத்தையே திருப்பதியில் நடத்த எண்ணினர். ஆனால் அதற்கு ஏற்ற சூழல் அமையாததால் மகாபலிபுரத்தில் திருமணத்தை நடத்தினர். இந்நிலையில் திருமணம் ஆன மறுநாளே இன்று திருப்பதியில் இருவரும் வழிபாடு நடத்தி உள்ளனர். பட்டு - வேஷ்டி சட்டையில் விக்னேஷ் சிவனும், மஞ்சள் நிற பட்டுப்புடவையில் நயன்தாரா என இருவரும் பாரம்பரிய உடையை அணிந்து வந்து வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் திருமணத்திற்கு பிறகான போட்டோஷூட்டை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி நடத்தி உள்ளனர். விதிமீறி இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோயிலின் நான்கு மாட வீதியில் செருப்பு அணியக்கூடாது என கோவில் சார்பில் அறிவிப்பு வைக்கப்பட்டது. ஆனால் அதை மீறி நயன்தாரா காலில் செருப்பு அணிந்தபடி இந்த போட்டோ ஷூட்டில் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. இந்த விஷயம் சர்ச்சையாகி உள்ளது.