மகன்களுடன் முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் | கவனம் ஈர்க்கும் 'தூமம்' டிரைய்லர் | பகவந்த் கேசரி பராக்: பாலய்யாவின் அடுத்த அதிரடி | விஜய் சேதுபதி படப்பிடிப்பை பார்க்க திரளும் மலேசிய மக்கள்: படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் | ஜூனியர் என்டிஆர் படத்தில் பிரியங்கா சோப்ரா? | பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை | யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் |
விக்ரம், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற வில்லன் பாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் கடைசி 3 நிமிடம் வரும் இந்த காட்சியின் போது திரையில் தீபிடிக்கும் என்று பொதுவாக விமர்னசங்கள் எழுதினார்கள். ஆனால் புதுச்சேரி காலாபட்டில் உள்ள ஜெயா திரையரங்கில் நிஜமாகவே ரோலக்ஸ் பாத்திரம் தியேட்டரில் தோன்றியபோது திரையி்ல் தீபிடித்து எரிந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. திடீரென திரை தீப்பிடித்ததை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக திரை தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.