பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
தமிழ் சினிமா நடிகர்களை ஹாலிவுட் நடிகர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது அவ்வப்போது நடக்கும். நடிகர் ரஜினிகாந்தை ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் உடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். நடிகர் அஜித்தை, ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குலுனியுடன் ஒப்பிட்டுப் பேசுவார் நடிகை குஷ்பு. ஹாலிவுட் நடிகர்கள், ஹாலிவுட் படங்கள் என்றாலே இங்கிருக்கும் சினிமா பிரபலங்களுக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு.
நடிகர் விஜய்யை இதுவரை யாரும் எந்த ஒரு ஹாலிவுட் நடிகருடன் ஒப்பிட்டுப் பேசியது இல்லை. முதல் முறையாக இயக்குனர் வெங்கட்பிரபு அப்படி பேசியிருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் உடன் விஜய்யை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
“எனக்குப் பிடிச்ச நடிகர் விஜய் சார். அவர் இப்ப எங்கேயோ போயிட்டாரு. எனக்குப் பிடிச்ச ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். எனக்கு வில் ஸ்மித் பண்றது எல்லாம் பார்க்கும் போது விஜய் சார் பண்ற மாதிரியே இருக்கும். ஒரு காலகட்டத்துல வந்து அப்படியே இருந்துச்சு. ஆக்ஷன், நகைச்சுவை கலந்து பண்றத பார்க்கும் போது வில் ஸ்மித் மாதிரி ஒரு படம் விஜய் சாரை வச்சி பண்ணனும்னு இருந்துச்சு. எனக்கு இன்னும் அந்த மாதிரி கதை இன்னும் அமையலை. ஆனால், ஒரு ஐடியா இருக்கு. அதை டெவலப் பண்ணி விஜய் சார் கிட்ட சொல்லணும்னு ஆசைதான்,” என்கிறார் வெங்கட்பிரபு.