உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் |

தமிழ் சினிமா உலகில் கடந்த பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கமல்ஹாசன். அவர் நடித்து வெளிவந்த பல படங்கள் மாபெரும் வெற்றியையும், வரவேற்பையும் பெற்றுள்ளன. ஆனால், இதுவரையிலும் அவர் தனக்குக் கிடைத்த வெற்றிகளைக் கொண்டாடியதை விட 'விக்ரம்' படத்தின் வெற்றியை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்.
படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார், அவரது உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு அபாச்சி பைக், படத்தின் கிளைமாக்சில் ஒரே ஒரு காட்சியில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என பரிசுகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்.
ஆனால், படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து படத்தின் வெற்றிக்கும் வரவேற்புக்கும் உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோருக்கு கமல்ஹாசன் பரிசு ஏதும் தர மாட்டாரா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், படத்திற்கு இசையமைத்த அனிருத்திற்கும் பரிசு கிடையாதா என்ற கேள்வியும் எழுகிறது.
கமல்ஹாசன் இப்படி பரிசுகளை அள்ளித் தருவது இன்னொரு பக்கம் சில பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. விஜய் நடித்து வெளிவந்த 'பீஸ்ட்' படத்தின் வெற்றிக்காக விஜய் விருந்து மட்டும் வைத்தார். ஆனால், படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு ஏன் எந்தப் பரிசும் தரவில்லை என பலர் கிண்டலடித்து வருகிறார்கள்.
ஒரு காலத்தில் அஜித் அவருடைய படங்கள் வெற்றி பெறும் போது அப்பட இயக்குனர்களுக்கு கார் பரிசளிப்பார். அதன்பின் அவரும் அதை நிறுத்திவிட்டார். தற்போது கமல்ஹாசன் இப்படி பரிசளித்துள்ளதால் இனி விஜய், அஜித், ரஜினிகாந்த் ஆகியோரும் படம் வெற்றி பெறும் போது இயக்குனர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் என்ன பரிசளிப்பார்கள் என்ற கேள்வி தானாக எழும்.