‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
காளிதாஸ் படத்திற்கு பிறகு பரத் மீண்டும் பிசியான நடிகராகி விட்டார். ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த நடுவன் வெளியானது. தற்போ 8 பிளஸ், லவ், முன்னரிவான் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடித்து வந்த மிரள் படம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில் வாணி போஜன் நாயகியாக நடித்திருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு நடித்துள்ளனர். ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசை அமைக்கிறார், சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் கூறியதாவது: ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் தமிழ் திரையில் இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்கும், பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. சிவகார்த்திகேயன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பிரமோஷன் பணிகளை துவக்கி வைத்துள்ளார், என்றார்.