தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'விக்ரம்'. இப்படத்தின் பிரமோஷனுக்காக தனியொருவனாக ஊர் ஊராகச் சுற்றி வருகிறார் கமல்ஹாசன்.
சென்னை, டில்லி, மும்பை, மலேசியாவின் கோலாலம்பூர், கொச்சி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். நேற்று ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், நிதின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இன்று இரவு துபாயில் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளார். துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் இன்று இரவு 8.10 மணிக்கு 'விக்ரம்' பட டிரைலர் திரையிடப்பட உள்ளது.
தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ள 'விக்ரம்' படம் நாளை மறுநாள் ஜுன் 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.