'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. டைம் லூப் திரைக்கதையை அனைவருக்கும் புரியும் விதமாக உருவாக்கி இருந்தார் வெங்கட் பிரபு. வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் . கல்யாணி ப்ரியதர்சன் கதாநாயகியாக நடித்திருந்தார் . யுவன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் வசூலை ரூ.100 கோடியை கடந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் படத்தின் உண்மையான வசூலை விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் முறையாக சொல்லவில்லை என மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருந்தார்.
இந்நிலையில் மாநாடு திரைப்படம் உலக அளவில் 117 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றி படம் இது. இந்த வெற்றியை தேடித் தந்த சிம்பு, வெங்கட்பிரபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த செய்தி சிம்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .
சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார் . மேலும் இவர் நடித்து முடித்துள்ள வெந்து தணிந்தது காடு விரைவில் வெளியாக உள்ளது .