மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு |
தமிழ்த் திரையுலகில் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வரும் முக்கிய காதல் ஜோடி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களைப் பதிவிட்டு பலரையும் பொறாமைப்பட வைத்தவர்கள்.
இருவரிடமும் எப்போது திருமணம் என்று கேட்காதவர்களே கிடையாது. இதனிடையே, இருவரும் வரும் ஜுன் 9ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணப் பத்திரிகையும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்துள்ள சுற்றுலா நகரமான மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாம்.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் இதில் கலந்து கொள்ள உள்ளார்களாம். சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குலதெய்வக் கோயிலில் நயன்தாரா பொங்கல் வைத்து சாமி கும்பிட்டார். இருவரும் திருப்பதியும் சென்று வந்தனர். அனைத்துமே திருமணத்திற்காகத்தான் என்கிறார்கள்.
அடுத்த சில தினங்களில் இருவரும் தங்களது திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தகவல்.