அன்பானவரை இழந்து வாடுகிறேன் ; தவறான தகவலை பரப்பாதீங்க - மீனா | அவதார் 2 : கேட் வின்ஸ்லெட் லுக் அவுட் | வின்னர் 2 உருவாகிறது | 20 ஆண்டுகள் ; மாறாத மாதவன் - சிம்ரன் நெகிழ்ச்சி | அதே படம்... அப்பா இசையமைத்த மற்றொரு ஹிட் பாடலை பயன்படுத்திய யுவன் | கமலையும், மம்முட்டியும் இணைக்கும் விஸ்வரூபம் எடிட்டர் | திலீப்பின் பறக்கும் பப்பன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் ? | எம்ஜிஆர் பட கதை... ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர் | நான் வில்லன் இல்லை ; கடுவா ரகசியம் உடைத்த விவேக் ஓபராய் | குஷ்பு தொடரில் புதிய ஹீரோ |
அஜித் நடித்த 50வது படமான மங்காத்தாவை தனது கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாரித்தவர் தயாநிதி அழகிரி. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். அவருடன் திரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி உட்பட பலர் நடித்தார்கள். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நடிகர் அஜித் , ஷாலினி ஆகியோருடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை பகிர்ந்துள்ளார் தயாநிதி. அதோடு, சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்ன்னு அவரைச் சுற்றி இருக்கும் பொழுது கிடைக்கும் எனர்ஜியை வார்த்தையால் விவரிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் அவரது மனைவி அனுஷாவும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், சினிமாவில் இருக்கும் இரண்டு நடிகர்களின் ஆற்றலுக்கு ஈடாக வேறு யாரும் இருக்க முடியாது. அவர்கள் வாழ்க்கை அழகாக இருக்கிறது. உண்மையில் ஒரு அல்டிமேட் மாலை என்று பதிவிட்டு இருக்கிறார். இப்படி திடீரென்று அஜித் குடும்பத்தினருடன் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தயாநிதி அழகிரி வெளியிட்டதை அடுத்து ஒருவேளை மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போகிறாரா, அதற்கான சந்திப்பாக இது இருக்குமா என ரசிகர்கள் ஆயிரம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.