மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் | கமலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ தகவல் | ஓடிடியில் வெளியாகும் ரகுல் பிரீத் சிங் படம் | எனது காதலைக் கண்டுபிடித்தேன் - வருண் தேஜ் |
இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‛விருமன்' படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். 2டி என்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்டு மாதம் 31ம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வர உள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதையடுத்து கோகுல் இயக்கும் கொரோனா குமார் என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் அதிதி. இந்நிலையில் மலையாளத்தில் வெளியான கப்பேலா என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்குவதாக கூறப்படுகிறது.