அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படமும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார் .
இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு 'மாவீரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். தலைப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை அடுத்து அவர் இந்தப் புதிய படத்தில் அவர் இணைய உள்ளார்.