டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் தொழிலதிபர் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‛தி லெஜண்ட்'. பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நாயகியாக நடிக்கிறார். மறைந்த நடிகர் விவேக்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் மே 29-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதோடு இப்படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட உள்ளது. இவ்விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். அதோடு, முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலரையும் அழைக்க திட்டமிட்டுள்ளனர்.
‛வாடி வாசல்' பாடல் வெளியீடு
இதனிடையே இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியான நிலையில் இப்போது இரண்டாவது பாடலமாக ‛வாடி வாசல்' என்ற வீடியோ பாடலை இன்று(மே 20) காலையில் வெளியிட்டனர். கிராமத்து பின்னணியில் திருவிழா மாதிரியான செட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு நடிகை ராய் லட்சுமி ஆடி உள்ளார்.