விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு | பரமசிவன் பாத்திமாவுக்கு மறு தணிக்கையில் 'ஏ ' சான்றிதழ் | பிளாஷ்பேக்: ஹீரோயின்கள் ஆன லலிதா, பத்மினி | தமிழுக்கு வரும் ஸ்ராவணி ஷெட்டி | பிலிம் சேம்பர் மூலம் கட்டண உயர்வுக்கு விண்ணப்பித்த பவன் கல்யாண் படத் தயாரிப்பாளர் | பிளாஷ்பேக் : விசு இயக்கிய கமர்சியல் ஆக்சன் படம் |
பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். மாறன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லாததால் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் மாளவிகா, தனது புதிய புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருவதோடு, ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.
இந்நிலையில் ரசிகர்கள் உடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், மாறன் படத்தில் தனுசுடன் நடித்த படுக்கையறை காட்சி எத்தனை முறை படமாக்கப்பட்டது என்று கேட்டார். அதற்கு, ‛‛இந்த கேள்வியை பார்க்கும்போது உங்களது மண்டைக்குள் இருக்கும் மோசமான எண்ணம் தான் தெரிய வருகிறது'' என பதிலடி கொடுத்துள்ளார் மாளவிகா.