பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

கேன்ஸ் திரைப்பட விழா தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்தியத் திரையுலகில் இருந்து பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு வருகிறார்கள். நடிகைகள் விழா அரங்கம் முன்பாக ரெட் கார்ப்பெட்டில் விதவிதமான ஆடை அணிந்து நடப்பது வழக்கம். ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டு கேமராக்களின் கண்களுக்கு இரையாகி வருகின்றனர்.
ஐஸ்வர்யா, தீபிகா இதற்கு முன்பாக சில சர்வதேச விழாக்களில் இப்படி ஆடை அணிந்து சென்ற அனுபவம் உண்டு. ஆனால், தமன்னா, பூஜா ஹெக்டே இப்போதுதான் கவனம் ஈர்க்கின்றனர். 'பீஸ்ட்' பட நாயகியான பூஜா ஹெக்டே பறவை இறகுகளைப் போல வடிவமைக்கப்பட்ட நீண்ட கவுன் அணிந்து ரெட் கார்ப்பெட்டில் நடந்து போஸ் கொடுத்துள்ளார்.
அந்த ஆடையுடன் 'வாட் எ மொமென்ட்' என போஸ் கொடுத்து மகிழ்ந்துள்ளார். அவரது அந்த நீள கவுனை நான்கைந்து பேர் சேர்ந்து பிடித்து வந்தால் மட்டுமே பூஜாவால் நடக்க முடியும். எப்படி அதை அணிந்து நடந்தாரோ ?.