காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
ஹாலிவுட் சினிமா வரை சென்று இந்திய அளவில் ரசிகர்களை பெற்றுள்ள நடிகராக உயர்ந்துள்ள தனுஷ் திரைத்துறையில் நுழைந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து. அவர் உணர்வுப்பூர்வமான நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியதாவது : "அனைவருக்கும் வணக்கம் இந்தத் திரையுலகில் நான் என் வாழ்க்கையைத் தொடங்கி இரண்டு தசாப்தங்கள் ஆகின்றன என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் துள்ளுவதோ இளமை தொடங்கும் போது நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை, கடவுள் கருணை காட்டியுள்ளார். தொடர் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது ரசிகர்களுக்கு என்னால் நன்றி என்ற சொல்லில் முடித்துவிட முடியாது. நீங்கள் எனது பலத்தின் தூண்கள், உலகெங்கிலும் உள்ள சினிமா ஆர்வலர்கள் தங்கள் நிபந்தனையற்ற அன்பை என் மீது பொழிந்ததற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
அனைத்து பத்திரிக்கை, ஊடகங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இன்று என்னுடன் பணியாற்றிய அனைத்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. அண்ணன் மற்றும் இயக்குனர் செல்வராகவனுக்கு நன்றி. ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்! என்னுள் இருக்கும் நடிகரை அடையாளம் காட்டிய என் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு நன்றி. இறுதியாக நான் என் அம்மாவிற்கு நன்றி கூறுகிறேன், அவருடைய அன்றாட பிரார்த்தனைகள் தான் என்னைப் பாதுகாத்து என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்தன. அவர் இல்லாமல் நான் ஒன்றுமில்லை. மற்ற காரியங்களில் மும்முரமாக இருக்கும் அந்தத் தருணம் தான் வாழ்க்கை என்று எங்கோ படித்திருக்கிறேன். என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.
இந்த ஒரு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம். அதை எண்ணிப்பார்ப்போம். எண்ணம் போல் வாழ்க்கை, அன்பைப் பரப்புங்கள், ஓம் நமசிவாய".
என குறிப்பிட்டுள்ளார் .