சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள படம் 'குலு குலு'. அதுல்யா சந்திரா நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன், சேசு ஆகியோயர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊர் ஊராக சுற்றும் தேசாந்திரியாய் சந்தானம் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த மாதம்(ஜூன்) தியேட்டரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.