நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
தமிழ் சினிமா உலகில் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். ஒரு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஆறு வருடங்கள் காத்திருந்து படமாக்க உள்ளார்கள்.
“பூவரசம் பீப்பீ, சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கி வரும் படம் 'மின்மினி'. இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த 2016ம் வருடம் நடைபெற்று முடிந்தது. இப்படத்தில் நடிப்பவர்கள் இரு வேறு கால கட்டங்களில் நடிப்பதால் அவர்கள் வளர்வதற்காக ஆறு வருடங்கள் காத்திருந்து படமாக்க உள்ளார் ஹலிதா. பொதுவாக இரு வேறு கால கட்டங்களின் படத்தின் கதை இருக்கும் போது வெவ்வேறு நடிகர்களை நடிக்க வைப்பார்கள். ஆனால், ஹலிதா அதே நடிகர்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஆறு ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்.
இது குறித்து நேற்று அவர், 2016ம் ஆண்டில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த போது பதிவிட்டதை மீண்டும் ரிடுவீட் செய்து, “ஆறு வருடங்களுக்கு முன்பு முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படத்தில் படத்தில் பள்ளி சிறுவர்களாக நடிப்பவர்கள், இப்போது வளர்ந்து இளைஞர்களாக ஆகியிருப்பார்கள். அதற்காகத்தான் அவர் இத்தனை ஆண்டுகள் காத்திருந்து படமாக்குகிறார். வேறு எந்த மொழித் திரைப்படத்திலும் கூட இத்தனை ஆண்டு காத்திருந்து படமாக்கிய தகவலை இதுவரை கேள்விப்பட்டதில்லை.