''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கேஜிஎப் 2'. இப்படம் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இதுவரை 1125 கோடி வசூலித்துள்ளது. எப்படியும் 1200 கோடி வசூலைத் தொடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இப்படத்தில் நடித்ததற்காக படத்தின் கதாநாயகன் யஷ் வெறும் 30 கோடி ரூபாய் மட்டும்தான் சம்பளமாக வாங்கிக் கொண்டாராம். தமிழில் ஒரு படத்தின் பட்ஜெட் 200 கோடி என்றால் அதில் படத்தின் கதாநாயகனுடைய சம்பளமே 100 கோடிக்குப் போய்விடும். மீதி 100 கோடியில் இயக்குனர் சம்பளம், கதாநாயகி, இசையமைப்பாளர் சம்பளம், படத்தின் தயாரிப்பு என அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம் உருவான போதே அப்படம் வெளியாகும் வரை யஷ் எந்தவிதமான சம்பளத்தையும் பெற்றுக் கொள்ளவில்லையாம். படம் வெளியாகி ஹிட்டான பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம். அதன் பிறகு அவருக்கு படத்தின் வசூலில் கணிசமான ஒரு தொகையை பங்காகக் கொடுத்தார்களாம்.
தமிழில் ஒரு படம் ஹிட்டானதுமே தங்களது சம்பளத்தை 10 கோடி, 20 கோடி என இங்குள்ள ஹீரோக்கள் உயர்த்துவார்கள். தனது அடுத்த படத்தை சம்பளத்தை யஷ் உயர்த்துவாரா அல்லது அதே 30 கோடியை வாங்குவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.