சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்துள்ள படம் சாணிக்காயிதம். ஓடிடியில் நேற்று வெளியான இந்த படத்தில் கொடூரமான வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகில் பழிவாங்கும் கதைகள் புதியதல்ல, ஏற்கனவே மில்லியன் கணக்கில் இந்த மாதிரி கதைகள் வந்துள்ளன. இருப்பினும், சாணிக்காயிதம் மற்றும் எனது முந்தைய படமான ராக்கியில் காட்டப்படும் யதார்த்தத்தின் அம்சம் தமிழ் ரசிகர்களுக்கு ஒருவகையில் புதியது.
மற்ற படங்களில் காட்டப்படும் வன்முறை ஸ்டைலாக இருக்கும், அதிலிருந்து இந்த படம் மாறுபடும். சாணிக்காயிதம் திரைப்படம் மூலமாக நான் ஒரு வித்தியாசமான முயற்சியை கொண்டு வர விரும்பினேன், தீவிரமான சூழ்நிலைகளில் ஒரு கதாபாத்திரம் எப்படி எதிர்வினையாற்றும் என்பது பற்றியதுதான் இக்கதை. இருப்பினும், வன்முறையைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல, படத்தில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். என்கிறார்.




