நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அடுத்து கைதி, மாஸ்டர் என குறுகிய காலத்திலேயே கார்த்தி, விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கினார். இப்போது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதிரடி ஆக் ஷன் கதையில் தயாராகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன. ஜூன் 3ல் படம் திரைக்கு வர உள்ளது. வருகிற மே 15ல் இசை மற்றும் டிரைலர் வெளியாக உள்ளது.
இந்நிலையில் லோகேஷை கமல் பாராட்டி இருப்பார் போல. அதுகுறித்து, “36 வருட தவம். எனக்குள் இருக்கும் இயக்குனரை, என் உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்ட” என்று பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.