நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு | சின்னத்திரையில் பார்த்திபன் | பிளாஷ்பேக் : மம்முட்டி வேண்டாம் என ஒதுக்கிய டைட்டில் மோகன்லாலுக்கு கிரீடம் சூட்டியது | கர்நாடக முதல்வரை சந்தித்த ராம்சரண் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் ருக்மணி வசந்த் : ரகசியம் உடைத்த மதராஸி தயாரிப்பாளர் | மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் |
இயக்குனர் கிரி மர்ப்பி இயக்கத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படம் 'கொஞ்சம் பேசினால் என்ன'. இந்த படத்தை சூப்பர் டாக்கீஸ் சார்பில் அமீர் பரத் தயாரித்து வருகிறார். வினோத் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தீபன் சக்ரவர்த்தி இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. கீர்த்தி பாண்டியனும், வினோத் கிஷனும் ஒருவருக்கொருவர் வீடியோ காலில் பேசிக்கொள்ளுமாறு போஸ்டர் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது .