படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் காட்பாதர், போலோ சங்கர் மற்றும் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் சிரஞ்சீவி நடிக்கிறார். இந்தநிலையில் சிரஞ்சீவி நடிப்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக ஒரு தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா
இதுபற்றி அவர் கூறும்போது, “எங்களுடைய ராடன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதற்காக அன்பு சிரஞ்சீவிக்கு நன்றி. மாஸ் மன்னனான சிரஞ்சீவியுடன் இணைந்து பிளாக்பஸ்டர் படத்தை உருவாக்குவதற்கு காத்திருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் தெரிகிறது
எண்பது, தொண்ணூறுகளில் சிரஞ்சீவியுடன் இணைந்து பல தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் ராதிகா. அதுமட்டுமல்ல 90களின் நட்சத்திர சங்கமத்தில் அடிக்கடி சந்திப்பு நிகழ்த்தியும் ராதிகா தங்களது நட்பை பலப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.