படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
பார்த்திபன் இயக்கம் நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'இரவின் நிழல்' படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. விழா மேடையே ஒரு பூங்கா போல செட் செய்து அற்புதமான லைட்டிங், மேடை அலங்காரங்களுடன் தனக்கே உரிய பாணியில் வித்தியாசமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் பார்த்திபன்.
ஆனால், நிகழ்ச்சியில் அவர் செய்த செயல் ஒன்று பார்வையாளர்களையும், விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களையும், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானையும் அதிர்ச்சியடைய வைத்தது. நிகழ்ச்சிக்குத் தாமதமாகத்தான் வந்தார் ரஹ்மான். அவர் வந்ததிலிருந்தே ஏதோ ஒரு பதட்டத்தில் இருந்தார் பார்த்திபன். அதுவரையில் திட்டமிட்டபடி ஒழுங்காக சென்ற நிகழ்ச்சி திடீரென சலசலப்பை ஏற்படுத்தியது.
முதல் சிங்கிள் வெளியிடுவது பற்றிய அறிவிப்பை ரோபோ சங்கர் ஓரிரு வார்த்தைகளில் அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள் போலிருக்கிறது. அந்த சமயத்தில் ரோபோ சங்கர் மைக் வேண்டும் என்று கேட்க, மேடையில் ஏஆர் ரஹ்மானுடன் அமர்ந்திருந்த பார்த்திபன் அங்கிருந்தே ஒரு மைக்கை ரோபோ சங்கரை நோக்கி வீசி எறிந்து, “அதை முன்னாடி இல்ல கேட்கணும்,” என்று கோபமாகப் பேசினார்.
பார்த்திபனின் இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இருப்பினும் ரோபோ சங்கர், அந்த ஒரு வரி அறிவிப்பை கொஞ்சம் பதட்டத்துடனேயே வெளியிட்டார்.