'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகிறர்கள். யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 19 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி - யுவன்சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
மேலும் இப்படத்தில் மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐய்யர், ஐஸ்வர்யா தட்டா, ரைஷா வில்சன், திவ்ய தர்ஷினி, யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா ஷண்முகம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் கசிந்துள்ளது. இப்படத்திற்கு 'காபி வித் காதல்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வமாக தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.