நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் | இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது |
மாநாடு படத்தை அடுத்து மன்மதலீலை என்ற படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து நாகசைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். வெங்கட்பிரபு எங்கு சென்றாலும் அவரை துரத்தும் ஒரு கேள்வி மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம். இது குறித்து ஏற்கனவே தான் அளித்த பல பேட்டிகளில், மங்காத்தா இரண்டாம் பாகத்துக்கான கதையை அஜித்திடத்தில் கூறி விட்டதாகவும் அவரது அழைப்பு எப்போது வந்தாலும் உடனே அந்த படத்தை தொடங்குவேன் என்று கூறி இருந்தார் வெங்கட்பிரபு.
இந்நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மீண்டும் மங்காத்தா-2 படம் குறித்து இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளார் வெங்கட்பிரபு. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் சிறப்பான கதையை தயார் செய்து வைத்துள்ளேன். அதோடு அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து மங்காத்தா 2 படத்தை எடுக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். இந்த கதையை அவர்கள் இருவரிடத்திலும் கூறிவிட்டேன். மங்காத்தா 2 படம் விரைவில் உருவாகும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.