அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு ஷாருக்கான் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி எனும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான 'பீகே', 3 இடியட்ஸ் , சஞ்சு உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் டாப்ஸி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி திரைப்படம் வெளியாகி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் ஏற்கனவே அக்லி(Ugly), ஜோக்கர் உள்ளிட்ட இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார். அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகும் சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.