ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ள படம் சாணிக்காயிதம். கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடித்துள்ளனர். வருகிற 6ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் கதை பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது 5 வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில் அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள். இருவரும் சேர்ந்து எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: இதுவரை நான் நடித்த கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியை சாணிக் காயிதம் கொண்டுள்ளது. அனுபவமில்லாத அதே சமயம் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய பாத்திரமும், இயக்குநர் அருணின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும் தொலைநோக்குப் பார்வையும்தான் இந்த கடினமான படத்தின் ஒரு பகுதியாகப் பங்கேற்க என் ஆர்வத்தைத் தூண்டியது. அதற்கு மேலாக இயக்குனர் செல்வராகவன் உடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மேலும் சிறப்பைச் சேர்த்தது என்றார்.