ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சென்னை : சேவை வரி நிலுவைத் தொகை 1.87 கோடி ரூபாய் செலுத்துமாறு, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வுத் துறை 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
இது குறித்து, மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இசையமைப்பாளர் இளையராஜா, தன் பாடல்களுக்கான காப்புரிமை வாயிலாக, பல கோடி ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளார். ஆனால், அதற்கான சேவை வரியை அரசுக்கு செலுத்தவில்லை. குறிப்பாக, 2013 - 14ம் நிதியாண்டுக்கான வரி செலுத்தவில்லை என்றும், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும், புலனாய்வுத் துறை தலைமை இயக்குனர், பிப்ரவரி 28ல், இளையராஜாவுக்கு, 'சம்மன்' அனுப்பியுள்ளார். அதில், 'சேவை வரி செலுத்தாததால் விசாரணைக்காக, மார்ச் 10ம் தேதி காலை 11:00 மணிக்கு ஆஜராக வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. ஆனால், இளையராஜா ஆஜராகவில்லை.
அதைத் தொடர்ந்து, மார்ச் 28ல் ஆஜராகும்படி, புலனாய்வுத் துறை, மீண்டும் சம்மன் அனுப்பியது; அப்போதும் அவர் ஆஜராகவில்லை. இதே போல, மூன்று முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. ஆனால், 2013 - 14ம் நிதியாண்டின் அவரது கணக்கை ஆய்வு செய்ததில், அவர் சேவை வரி செலுத்த வேண்டும் என்பதும், தற்போது வரை, 1.87 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது என்றும், ஜி.எஸ்.டி., புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. எனவே, நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு, அவருக்கு இறுதி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை, அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.