ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சிரஞ்சீவி நடிப்பில் வரும் ஏப்-29 அன்று ஆச்சார்யா திரைப்படம் வெளியாக இருக்கிறது. கொரட்டாலா சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் சானா கஷ்டம் என்கிற ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியுள்ளார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.
அதேசமயம் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான காஜல் அகர்வால், படப்பிடிப்பு சமயத்தில் தான், தனது கர்ப்பம் காரணமாக இந்த படத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். படத்திலும் அவர் சிரஞ்சீவிக்கு ஜோடி இல்லை என்பதாலும் அவரது கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் இல்லை என்பதாலும் படத்தில் இருந்து அவரது காட்சிகள் தற்போது நீக்கப்பட்டுவிட்டன.
அதேசமயம் இந்தப் படத்தில் காஜலுக்கு பதிலாக நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளார் என்கிற புதிய தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது. அனுஷ்கா இந்த படத்தில் நடித்துள்ள விவரத்தை படம் வெளியாகும் வரை ரசிகர்களிடம் சஸ்பென்சாக வைத்திருக்க படக்குழுவினர் முடிவு செய்ததால் தான் புரமோஷன் நிகழ்ச்சிகளில் உட்பட எங்கேயும் அனுஷ்காவின் பெயரை யாரும் குறிப்பிடவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
நடிகர் சிரஞ்சீவி சினிமாவை ஒதுக்கிவிட்டு அரசியலுக்குள் நுழைந்த சமயத்தில்தான் முன்னணி கதாநாயகியாக திரையுலகில் நுழைந்து வளர ஆரம்பித்தார் அனுஷ்கா. அதேசமயம் சிரஞ்சீவி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவில் முழு கவனம் செலுத்தி வரும் இந்த சமயத்தில் அனுஷ்காவின் மார்க்கெட் டல்லடித்து இறங்குமுகத்தில் இருக்கிறது. இதனால் சிரஞ்சீவியுடன் கதாநாயகியாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு அனுஷ்காவிற்கு கைகூடவில்லை. இதற்கு முன்னதாக சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் கூட அனுஷ்கா இதேபோன்று கெஸ்ட் ரோலில் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.