'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவாங்கி. அந்த பிரபலத்தால் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். நேற்று ஷிவாங்கி, நடிகர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஜாலி ஓ ஜிம்கானா' படப்பிடிப்பின் போது இது நடந்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தளபதி, சிவகார்த்திகேயன் அண்ணா உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
விஜய்யுடன் போட்டோ எடுப்பதற்கும், அவரை சந்திப்பதற்கும் சிவகார்த்திகேயன் தான் ஏற்பாடு செய்திருப்பால் போலிருக்கிறது. 'பீஸ்ட்' இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஷிவாங்கியின் இந்தப் பதிவிற்கு லட்சக்கணக்கான லைக்குகளும், ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகளும் கிடைத்துள்ளன.