கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான “புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகியவை வட இந்தியாவில் வெற்றி பெற்று, நல்ல வசூலையும் பெற்று, லாபத்தைக் கொடுத்துள்ளது. அதே சமயம், தெலுங்கில் நானி நடித்து வெளிவந்த 'ஜெர்சி' படம் அதே பெயரில் ஹிந்தியில் ஷாகித் கபூர் நடிக்க ரீமேக் ஆகி கடந்த வாரம் வெளியானது. ஆனால், படம் எதிர்பாராத அளவில் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது.
இது குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா எச்சரிக்கை செய்துள்ளார். அவர் கூறுகையில், “ஜெர்ஜி' படத்தின் பேரழிவு, ரீமேக் படங்களுக்கான எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது. “புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய டப்பிங் படங்கள் ஒரிஜனல் படங்களை விட நன்றாகவே வசூலிக்கின்றன. படத்தின் கதை நன்றாக இருந்தால் போதும் என்பது பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
நானியின் 'ஜெர்சி' படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டிருந்தால், அந்தத் தயாரிப்பாளர்களுக்கு 10 லட்ச ரூபாய்தான் செலவாகி இருக்கும். ஆனால், அந்தப் படத்தை ஹிந்தியில் 100 கோடி செலவில் ரீமேக் செய்து தோல்வியடைந்ததால் பணம், நேரம், முயற்சி அனைத்தும் வீணாகிப் போனது.
'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய தென்னிந்தியப் படங்கள் அளித்த பெரிய வெற்றிக்குப் பிறகு நல்ல கன்டென்ட் கொண்ட படங்களின் ரீமேக் உரிமை விற்கப்பட வாய்ப்பில்லை. எந்த பிராந்திய நட்சத்திரங்களையும் ரசிக்கும் நிலைக்கு ஹிந்தி ரசிகர்கள் வந்துவிட்டார்கள்.
ரீமேக் உரிமையை இனி யாரும் விற்க மாட்டார்கள் என்பதால், எப்படி சூப்பர் ஹிட் படங்களை உருவாக்குவது என்பது தெரியாமல் பாலிவுட் முன்னும், பின்னும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
கதையின் நீதி என்னவென்றால், ஒரு படத்தை ரீமேக் செய்வதை விட இனி டப்பிங் படங்களை வெளியிடுவதுதான் புத்திசாலித்தனம். ரசிகர்கள் எந்த முகத்தையும், எந்த கதையையும் எங்கிருந்து வந்தாலும் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும் வரை ரசிப்பார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.