ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் ஆல்பம் பாடல் இயக்குநர் டி.ராஜேந்தர் குரலில் வெளியானது.
இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக 'நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க' எனும் பாடல் இலங்கை கவிஞர் அஷ்மின் எழுத்தில், இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில் இயக்குநர் டி.ராஜேந்தர் குரலில் வெளியாகியுள்ளது.
இது குறித்து டி.ராஜேந்தர் கூறியதாவது: இலங்கை மக்களுக்காக அங்கு அவர்கள் படும் கஷ்டத்திற்காக இந்தியா 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி உதவியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி. இந்த நிலையில் இலங்கையில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. அந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில், இலங்கை கவிஞர் அஷ்மின் உடன் இணைந்து, இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில், உருவான பாடலை நான் பாடியிருக்கிறேன். என்றார்.