பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

‛ஜோக்கர், ஆண் தேவதை' போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன்பின் சேலையில் கவர்ச்சியான போட்டோஷூட் பதிவிட்டு பரபரப்பானார். தொடர்ந்து குக் வித் கோமாளி, பிக்பாஸ், பிக்பாஸ் அல்டிமேட் போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலமும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகப்படியான கவனத்தை பெற்றார். தற்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரசிகர்களுடன் இணையதளத்தில் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் ரம்யாவிடம் ‛‛நீங்கள் என்ன படித்துள்ளீர்கள், உங்களை போன்ற ஒரு பெண்ணை தான் என் மகனுக்கு தேடி வருகிறேன்'' என கேட்டார். அதற்கு அவர் "இந்த விஷயம் உங்க பையனுக்கு தெரியுமா?" என ஸ்மைலி உடன் பதில் கொடுத்துள்ளார். மற்றொருவர் திருமணம் பற்றி கேட்க, ‛‛எனக்கானவரை நான் கண்டுபிடிக்கும்போது அவருக்கும் என்னை பிடிக்க வேண்டும். இப்போதைக்கு வாய்ப்பில்லை'' என்றார்.




