இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ஆச்சார்யா. கொரட்டாலா சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணும் சற்று நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அதற்கு முன்னதாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிப்பதற்காக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி படப்பிடிப்பிற்கு வருகை தருவதை நிறுத்தினார்.
இதனால் இந்த படத்தில் காஜல் அகர்வால் இருக்கிறாரா இல்லையா..? அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அதற்கு முன்னதாகவே படமாக்கி விட்டார்களா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லரில் கூட காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. இதனால் இந்த படத்தில் காஜல் அகர்வால் சம்பந்தமாக எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் இல்லாமலேயே இந்த படம் திரைக்கு வரும் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆச்சார்யா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிரஞ்சீவி ராம்சரண் உள்ளிட்ட படக்குழுவினரும் மற்றும் சிறப்பு விருந்தினரான ராஜமவுலி உட்பட யாருமே காஜல் அகர்வால் பெயரை மேடையில் உச்சரிக்கவே இல்லை. அந்த வகையில் இந்த படத்தில் காஜல் அகர்வால் இல்லை என்பது 100 சதவீதம் உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம்.