இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? | திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் |
சூர்யா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலாவின் டைரக்ஷனில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது மும்பைக்கு பறந்து உள்ளார் சூர்யா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதா கொங்கரா டைரக்ஷனில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து இந்த படம் தற்போது ஹிந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது. இந்த படத்தை ஹிந்தியில் சூர்யாவின் 2டி நிறுவனமும் பிரபலமான அபுண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் என்கிற பாலிவுட் பட நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதமே இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் பணிகளை முடுக்கி விடுவதற்காக சூர்யாவும் அவரது நண்பரும் 2டி சினிமாவின் நிர்வாக தயாரிப்பாளருமான ராஜசேகரும் மும்பை சென்றுள்ளனர்.