படம் இயக்க தயாராகும் கீர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் | சபரிமலை தங்க தகடு திருட்டு வழக்கில் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு | பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? | தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! |

மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் நடிகர் தனுஷ் எங்கள் மகன், அவர் எங்களை பராமரிக்க வேண்டும் எனறு பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மேலூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தனுஷ் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மேலூர் தம்பதிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் போலியானது என்று மேலூர் தம்பதிகள் மதுரை ஜூடியசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த குற்றச்சாட்டிற்கு போதிய முகாந்திரம் இல்லை என இந்த மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இத்தோடு இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக கருதிய நிலையில், தற்போது மேலூர் தம்பதிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தனுஷின் பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மை அறிய சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. அதற்கு முன்னதாக எங்கள் வழக்கை தள்ளுபடி செய்ததற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதனால் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சென்னை மாநகராட்சி தனுஷின் பிறப்பு சான்றிதழ் உண்மையானதுதான் என்று சான்றளித்தால் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




