தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் |

நடிகையும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு சமூக வலைத்தளங்களில் பிசியாக செயல்படக்கூடியவர். சமீபத்தில் அரசியல் பயணமாக டில்லி சென்று விட்டு திரும்பி இருந்தார். இந்த நிலையில் அவர் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் குணமடைந்து விடுவதாகவும் படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
ஆனால் தனக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. அவரது ரசிகர்கள் பதிவின் கீழ் வெளியிட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள குஷ்பு. "லேசான பிரச்சினைதான் திடீரென நடந்து விட்டது. இப்போது நலமாக இருக்கிறேன். விரைவில் வீடு திரும்புவேன்" என்று கூறியிருக்கிறார்.
வீட்டில் நடக்கும்போது வழுக்கி விழுந்ததில் அவர் காலில் அடிபட்டிருப்பதாகவம், அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.




