டாலடிக்கும் ரத்தினமே - நயனை வர்ணிக்கும் விக்கி | ‛‛தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்'' - திரைப்பிரபலங்களின் சுதந்திர தின கொண்டாட்டம் | இணையத்தில் கசிந்த விஜய்யின் வாரிசு படக் காட்சி | இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'கேஜிஎப் 2' படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. நாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம் என்றாலும் படத்தில் நடித்த ஒவ்வொருவரைப் பற்றியும் ரசிகர்கள் தேடித் தேடிப் பார்த்து பதிவிட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் படத்தில் குட்டி யஷ்ஷுக்கு அம்மாவாக நடித்த அர்ச்சனா ஜாய்ஸ் தான் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மாடர்ன் பெண்ணான அர்ச்சனாவை படத்திற்காக கிராமத்து அம்மாவாக மாற்றியிருக்கிறார்கள். இன்ஸ்டாவில் அர்ச்சனாவின் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுப் போய் உள்ளார்கள். 27 வயதான அர்ச்சனா சிறந்த கதக் நடனக் கலைஞர். பல நாடகங்களில் நடித்தவர். கன்னடத்தில் வந்த 'மகாதேவி' என்ற தொடர் மூலம் பிரபலமானவர். அந்த சீரியலில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கன்னட ரசிகர்களைக் கவர்ந்தவர். ஷ்ரேயாஸ் உத்தப்பா என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
'கேஜிஎப்' முதல் பாகம்தான் அவர் நடித்த முதல் படம். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அவருக்குக் கூடுதலான காட்சிகளை வைத்துள்ளார்கள்.