அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஏரோ ஸ்பேஸ் துறை சார்பாக தக்ஷா தனியார் நிறுவனமாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து மாநில அளவில் தக்ஷா குழு ட்ரோன் தயாரிப்பில் பெரிய அளவில் பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் "மேக் இன் இந்தியா திட்டத்தின்" கீழ் மத்திய பயணிகள் விமான சேவை துறை சார்பாக ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கு சென்னையின் தக்ஷா குழு தேர்வாகியுள்ளது.
இந்திய முழுவதும் ஆளில்லா விமானம் தயாரிப்புக்கு மொத்தம் 5 நிறுவனமும், ஆளில்லா விமானம் உதிரி பாகங்கள் தயாரிப்புக்கு 9 நிறுவனங்களும் தேர்வாகியுள்ளது. நடிகர் அஜித் விமானம் ஓட்டுபவது மற்றும் அது சார்ந்த துறைகளில் ஆர்வம் மிக்கவர். ஏற்கனவே இவர் இதுபோன்று தனியாக ஆளில்லா சிறிய டிரோன்களை தயாரித்து, சோதனை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் இவரை அண்ணா தொழில் நுட்ப கல்லூரி தொழில் ஆலோசராக நியமித்துள்ளது. விமான பிரிவு மாணவர்களுக்குகு நடிகர் அஜித் அடிக்கடி பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கிவ ந்தார் .
அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்ஷா ஆளில்லா விமானம் குழு மத்திய அரசுக்கு ட்ரோன்களை தயாரித்து கொடுப்பதற்கு தேர்வாகியுள்ளது என்ற செய்தி அஜித் ரசிகர்களுக்கிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .