டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து முதன்முறையாக இசையமைத்துள்ளனர். வருகின்ற மே 20 ம் தேதி வெளியாக இருந்த இப்படம் தற்போது ரிலீசே தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆர்கே சுரேஷ் மாமனிதன் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமைகளை வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் .
ரிலீஸ் மாதம் குறித்து ஆர்கே சுரேஷ் பகிர்திருக்கும் பதிவு, 'விஜய் சேதுபதி நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால், 'மாமனிதன்' படத்தின் வெளியீடு மே 20-ம் தேதியில் இருந்து ஜூன் 24-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியிட 'மாமனிதன்' தகுதியான படம். அனைத்துத் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்' இவ்வாறு கூறியுள்ளார் .