போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
பிரபல வீஜே மணிமேகலை திருமணத்திற்கு பின் தொலைக்காட்சியில் கம்பேக் கொடுத்து பல ஷோக்களில் கலக்கி வருகிறார். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாகவும் உள்ளார். மணிமேகலை, ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டார் தரப்பிலும் பெரிய அளவில் சப்போர்ட் இல்லை. இருப்பினும் இருவரும் தங்களது உழைப்பால் தொடர்ந்து கார், பைக் என வாங்கி சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிமேகலையின் கணவர் ஹூசைனுடைய பைக் அண்மையில் திருடு போய்விட்டது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதுபற்றி, 'திருமணத்திற்கு பிறகு மிகவும் கஷ்டப்பட்டு வாங்கிய முதல் பைக். மிகவும் சோகமாக உள்ளது. வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்க இருந்துதான் வருதோ!' என சோகமாக பதிவிட்டுள்ளார் மணிமேகலை. அத்துடன் பைக் குறித்த விவரங்களையும் பதிவிட்டு உதவி கேட்டுள்ளார்.