‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்திரி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமனிதன்'. இந்த படத்திற்கு இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடந்தது.
விழாவில் பேசிய விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன், அவருடைய இசையில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இயக்குநர் சீனு ராமசாமி மனிதாபிமானத்தை மையப்படுத்தி படம் எடுக்க கூடியவர். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என்றார்.