68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'கேஜிஎப் 2'. இப்படம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளிலேயே 100 கோடி வசூலைக் கடந்த படம் முதல் வார இறுதியில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது.
அது மட்டுமல்ல கடந்த வாரத்திற்கான உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 'கேஜிஎப் 2' படம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த வார நிலவரப்படி 'பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படம் உலக அளவில் 114 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் 'கேஜிஎப் 2' படம் 70 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஒரு கன்னடத் திரைப்படம் உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை. மூன்றாவது இடத்தை 'சோனிக் 2' படம் 55 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலுடன் பிடித்துள்ளது.
உலக அளவில் 70 மில்லியன் யுஎஸ் டாலர் வசூல் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 550 கோடி ரூபாய். இந்த வாரத்திலும் 'கேஜிஎப் 2' படத்தின் வசூல் சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.