'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை நயன்தாரா, சமந்தா இவர்கள் எல்லாம் சீனியர் கதாநாயகிகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்களாகவும் வலம் வருபவர்கள் ராஷ்மிகா மந்தனாவும், பூஜா ஹெக்டேவும் தான்.
இதில் 10 வருடத்திற்கு முன்பே முகமூடி என்கிற தமிழ் படத்தில் தான் பூஜா ஹெக்டே முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியதால் அதன்பிறகு தமிழில் பூஜாவுக்கு படவாய்ப்புகள் வரவில்லை. அதுமட்டுமல்ல முதல் படமே தோல்வி என்கிற அந்த முத்திரையை உடைத்துக்கொண்டு வெற்றிப்பட ஹீரோயினாக அவர் மாறுவதற்கு பல வருடப் போராட்டம் நிகழ்ந்தது.
இந்த நிலையில் எங்கு தோல்வியை சந்தித்தோமோ அதே தமிழ் திரையுலகில் மீண்டும் முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார் பூஜா. ஆனால் இந்த படமும் ஹிட் என்கிற வரிசையில் இடம் பெறாமல் போனதால் பூஜா ஹெக்டே கொஞ்சம் அப்செட் ஆக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இன்னும் தமிழில் வேறு எந்த ஹீரோவுடன் அடுத்த படத்தில் அவர் ஒப்பந்தம் ஆகாததால் இனி தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.




