எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

தென்னிந்தியத் திரையுலகத்தில் பல வசூல் சாதனைகளை எப்போதோ படைத்தவர் தமிழ் நடிகரான ரஜினிகாந்த். அவரது பல படங்கள் தெலுங்கு, ஹிந்தியில் டப்பிங் ஆகி குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுள்ளன.
இதுவரையில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான படங்களில் தமிழ்ப் படங்கள்தான் அதிக வசூலைப் பெற்றுள்ளன. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த '2.0, ரோபோ' ஆகிய படங்கள்தான் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. அதற்கடுத்த இடங்களில் “ஐ, கபாலி, காஞ்சனா 3, சிவாஜி, முனி 3, பிச்சைக்காரன், லிங்கா, 24, ஏழாம் அறிவு, மாஸ்டர்” ஆகிய படங்கள் உள்ளன.
இவற்றில் '2.0' படம் 50 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அந்த வசூலை இப்போது கன்னடத்திலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் செய்யப்பட்டுள்ள 'கேஜிஎப் 2' படம் முறியடிக்க உள்ளது. மூன்றே நாட்களில் 'கேஜிஎப் 2' படம் தெலுங்கில் 43 கோடி வசூலை எட்டியுள்ளது. இன்றைய ஒரு நாள் வசூல் மூலம் 50 கோடி ரூபாயைக் கடந்துவிடும் வாய்ப்புள்ளது.
கடந்த பல வருடங்களாக தெலுங்குத் திரையுலகத்தில் தனது டப்பிங் படங்களின் மூலம் ஆதிக்கம் செலுத்தி வந்த ரஜினிகாந்த்தின் சாதனையை கன்னட நடிகரான யஷ் முறியடிக்கப் போகிறார்.