'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் சிவகார்த்திகேயன். இப்போது தமிழில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது பூர்வீக கிராமம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருவீழிமழலை ஆகும். பூர்வீக இசை குடும்பம் அவருடையது. சிவகார்த்திகேயன் தாத்தாக்களான கோவிந்தராஜா பிள்ளை, தட்சினாமூர்த்தி பிள்ளை இருவரும் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நாதஸ்வராக கலைஞராக விளங்கியவர்கள்.
சிவகார்த்தியேனின் தந்தை போலீஸ் அதிகாரியாக திருச்சியில் பணியாற்றியதால் நீண்ட காலம் சிவகார்த்திகேயன் திருச்சியில் வளர்ந்தார். இந்த நிலையில் தாத்தாக்கள் வாழ்ந்த பூர்வீக கிராமமான திருவீழிமழலையில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ் புத்தாண்டு தினத்தன்று கிரஹபிரவேசம் நடந்துள்ளது. அதில் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருக்கிறார்.