நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. தெலுங்கிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று அங்கு வெற்றிக்கொடி நாட்டி பலருக்கும் வழி காட்டியவர். அவரது வழியில்தான் இன்று ராஜமௌலி உள்ளிட்டவர்களும் ஹிந்தியில் சாதித்து வருகிறார்கள்.
அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களைப் பதிவிடும் வர்மா, 'கேஜிஎப் 2' படம் பார்த்துவிட்டு மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்தை, ஆனால், உண்மையான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
“கேஜிஎப் 2' படத்தின் அசுரத்தனமான வெற்றி தெளிவான ஒரு ஆதாரமாக அமைந்துவிட்டது. ஒரு படத்தின் ஹீரோவுக்கு அதிக சம்பளம் கொடுத்து வேஸ்ட் செய்வதை விட, படத்தின் மேக்கிங்கிற்கு அதிக பணம் செலவழித்தால் பெரிய தரமும், மிகப் பெரிய வெற்றியும் வரும்.
'ஹிந்தித் திரையுலகத்தை விடுங்கள். கேஜிஎப் படம் வரும் வரை தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகம் கன்னட சினிமாவை சீரியசாக எடுத்துக் கொண்டதேயில்லை. ஆனால், இப்போது பிரசாந்த் நீல் அதை உலக வரை படத்தில் வைத்துவிட்டார்.
மும்பைக்கு மிஷின் கன்னுடன் வந்து, ராக்கி பாய் வில்லன்களை எப்படி சுட்டார் என்பதை ரசித்தேன். ஆனால், யஷ், அனைத்து பாலிவுட் ஸ்டார்களின் முதல் நாள் வசூலையும் சுட்டுத் தள்ளிவிட்டார். படத்தின் இறுதி வசூல், கன்னட சினிமாவிலிருந்து பாலிவுட்டிற்கு ஒரு நியூக்ளியர் பாம் போட்டது போல இருக்கப் போகிறது.
பிரசாந்த் நீலின் கேஜிஎப் 2 ஒரு கேங்ஸ்டர் படம் மட்டுமல்ல, அது பாலிவுட்டிற்கு ஒரு ஹாரர் படமும் கூட. அதன் வெற்றியைப் பற்றி அவர்கள் வரும் ஆண்டுகளிலும் கனவு கண்டுகொண்டிருப்பார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.