ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

குவைத் : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பதட்டத்தை தூண்டுகிறது, அமைதியை குலைப்பதாக இருக்கிறது என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வெளியாகி உள்ளது. முஸ்லீம்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரித்துள்ளதாக கண்டனம் எழுந்த நிலையில் இப்படத்திற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குவைத்தில் தமிழக மக்களுக்கு மத்தியில் பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் எம்எல்ஏ.,வும், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : புனித ரமலான் அமைதியை தருகிறது. தமிழகத்தில் திரைப்படங்கள் வழியே சிலர் வெறுப்பை விதைக்கிறார்கள். முஸ்லீம் சமூகத்தை கொச்சைப்படுத்த முனைகிறார்கள். ஏற்கனவே அர்ஜுன், விஜயகாந்த், கமல்ஹாஸன் போன்றவர்கள் இந்த தவறை செய்தார்கள். இப்போது பீஸ்ட் படம் விஜய் இந்த தவறை மூலம் செய்துள்ளார். ஏற்கனவே துப்பாக்கி படம் மூலம் அவர் இதுமாதிரியான பிரச்னைகளை சந்தித்தார்.
![]() |




