ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? | ரஜினி செய்த மாற்றம் |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன் நடித்து வரும் படம் ஹரா. குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்குகிறார். தற்போது இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மோகன் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது சில ரவுடிகள் வழிமறித்து அவரை கொலை செய்ய வருகிறார்கள். அப்போது திடீரென்று ரவுடிகளின் தலைவன் தீப்பிடித்து எரிகிறான். 2.50 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டீசரில் ஒரு வசனம் கூட பேசாமல் தனது பார்வையாலேயே பேசி இருக்கிறார் மோகன். இந்த டீசரை பார்க்கும்போது இப்படம் மோகனுக்கு ஒரு அதிரடியான ரீ என்ரியை கொடுக்கும் என்பதை யூகித்துக் கொள்ள முடிகிறது.